அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் வருடாந்த,மகோற்சவிழாவின் வீடியோப் பதிவுகள் இணைப்பு!

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் வருடாந்த,மகோற்சவிழாவின் வீடியோப் பதிவுகள் இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டிக் கிராமத்தில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும்,இனிச்சபுளியடி முருகப்பெருமானின் வருடாந்த மகோற்சவம் -கடந்த மாதம் 10.04.2019 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று-18.04.2019 அன்று தேர்த்திருவிழாவும்,மறுநாள் தீர்த்தத்திருவிழாவும்,20.04.2019 அன்று திருக்கல்யாணமும்,நடைபெற்று-வருடாந்த மகோற்சவம் இனிதே நிறைவு பெற்றது.

திருவிழா உபயகாரர்களின் வேண்டுகோளின் பேரில்,அல்லையூர் இணையத்தினால்,முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் வீடியோப்பதிவு செய்யப்பட்டதுடன்-உடனுக்குடன் முகநூல் ஊடாக வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அனுசரணை…..
இம்முறை அல்லையூர் இணையத்தினால்,தேர்த்திருவிழா அன்று தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு-பக்தர்களுக்கு மோர்,சர்பத் வழங்கப்பட்டதுடன் மேலும் தேர்த்திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படப்பதிவிற்கான நிதி அனுசரணையுடன்-வலப்புரி நாளிதழில் வெளியாகிய தேர்த்திருவிழாவிற்கான கவிப்பாவிற்கான அனுசரணையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

கீழே….
கொடியேற்றம்
வேட்டை
சப்பரம்
தேர்
தீர்த்தம்….
ஆகிய முக்கிய திருவிழாக்கள் பதிவு செய்யப்பட்டுளளன.
,

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux