மண்டைதீவில்,இடம்பெற்ற,இலவச மருத்துவ முகாமில்,பயன்பெற்ற மக்கள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

மண்டைதீவில்,இடம்பெற்ற,இலவச மருத்துவ முகாமில்,பயன்பெற்ற மக்கள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!


கடந்த மாதம் 21.04.19  (ஞாயிற்றுக்கிழமை ) அன்று மண்டைதீவில் அமைந்துள்ள மகாவித்தியாலயத்தில்,  இலவச மருத்துவ முகாம் ஒன்று சிறப்பாக இ்டம் பெற்றது.

தமிழ் தாய் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற,
இந்த இலவச மருத்துவ முகாமின், சிறப்பு விருந்தினராக   யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார்.

மண்டைதீவு மகாவித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட இம்மருத்துவ முகாமில் 169 பயனாளிகள் வந்து பயன்பெற்றுச்சென்றனர். மேலும் 93பேருக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன். மேலும் 16பேருக்கு மூக்கு கண்ணாடிகள் செய்து வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இம்மருத்துவ முகாமினை ஏற்பாடு செய்த,மண்டைதீவு மண்ணின் மைந்தன் திரு கோகிலவாசன் ஜெகசோதி அவர்களின் வேண்டுகோளின் பேரில்,அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா அவர்களும்,சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

Leave a Reply