நயினாதீவு துறைமுகம் பிரமாண்டமான முறையில் புனரமைக்கப்பட்டு வருகின்றது-படங்கள் இணைப்பு!

நயினாதீவு துறைமுகம் பிரமாண்டமான முறையில் புனரமைக்கப்பட்டு வருகின்றது-படங்கள் இணைப்பு!


சப்த தீவுகளில் ஒன்றாக விளங்கும் நயினாதீவில் அன்று தொடக்கம் இன்று வரை பாரிய பிரச்சனைகளில் ஒன்றாக காணப்பட்ட துறைமுக பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்து விட்டமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

அந்த வகையில் பல்வேறு நாட்டு மக்களை கவரத்தக்கதும் பல்வேறு பட்ட இனத்தவரும் மதிக்கின்ற இவ் புனித பூமியானது இன்று பல்வேறு பட்ட விதத்தில் வளர்ச்சியடைந்து வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நாகபூசணி அம்மன் ஆலயம் மற்றும் நாகதீபவிகாரை, மசூதி, தேவாலயம் போன்றவற்றை காணவரும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இனி நீங்கள் பயப்படத்தேவையில்லை. பாதுகாப்பான துறைமுகம் தற்போது அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருப்பதனால் நீங்கள் அனைவரும் இப்புனித பூமியில் புனித யாத்திரையை மேற்கொள்ளமுடியும். என்பதை தெரிவித்துக் கொள்வதோடு இவ் துறைமுகத்தை அமைக்க அனைத்து முயற்சிகளை மேற்கொண்ட அனைவருக்கும் நயினை வாழ் மக்கள் சார்பில் மனமார்ந்த  நன்றிதனை தெரிவித்துக்கொள்கின்றார்கள்.

Leave a Reply