கிளிநொச்சி முகமாலை பகுதியில்,கண்ணிவெடிகளை அகற்றுவதில்,பாரிய சவால்களைச்சந்திக்கும் பணியாளர்கள்-படங்கள் இணைப்பு!

கிளிநொச்சி முகமாலை பகுதியில்,கண்ணிவெடிகளை அகற்றுவதில்,பாரிய சவால்களைச்சந்திக்கும் பணியாளர்கள்-படங்கள் இணைப்பு!

கிளிநொச்சி முகமாலை பகுதியில் யுத்தகாலத்தில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதில்  பாரிய சவால் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் கண்ணிவெடி அகற்றும் நிறுவனப்பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த பகுதிகளில் வெடிபொருட்கள் பெரும் சவால்களாக காணப்படுகின்றன. இதனைவிட இப்பகுதிகளில் இன்னமும் வெடிபொருட்கள் அகற்றப்படாத மிகவும் ஆபத்தான பகுதிகளில் கைவிடப்பட்ட காவலரண்களில் உள்ள மரக்குற்றிகள் இரும்புகள் என்பவற்றை பலர் எடுத்து வருகின்றனர்.

இதேவேளை கண்ணவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கும் பகுதிகளில் வெடிபொருள் ஆபத்துக்களுக்கு இடும் பதாதைகள் குறியீடுகள் என்பவற்றையும் சேதப்படுத்தியும் அவற்றை எடுத்தும் செல்கின்றனர்.

இதனால் மறுநாள் பணிகளை முன்னெடுப்பதற்கு முன்னர் அதனை சீர் செய்வதற்கு பணியாளர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

வெடிபொருள் அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்ட பகுதிகள்  தவிர்ந்த ஏனைய ஆபத்தான பகுதிகளுக்கு பொலிசாரின் பாதுகாப்பு போடப்படவேண்டும் என்ற அவசியத்தை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது என்றார்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux