வேலணை  சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்ற,அமரர் திருமதி கமலாதேவி தர்மலிங்கம் அவர்களின் நினைவுதின நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்ற,அமரர் திருமதி கமலாதேவி தர்மலிங்கம் அவர்களின் நினைவுதின நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தின் முன்னாள் ஆசிரியை, அமரர் திருமதி கமலாதேவி தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக தெரிவு செய்யப்பட்ட பத்து மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்புத் திட்ட ஆரம்ப நிகழ்வும், அன்னாரின் நினைவு நிகழ்வும் இன்று 06.03.2019 புதன்கிழமை மதியம் 1மணியளவில் வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் திரு சோ .தவநடராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அன்னாரது திருவுருவப்படத்திற்கு அன்னாரின் சகோதரர் திரு பொ.பாலசுந்தரம்பிள்ளை (முன்னைநாள் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியரும்) அவர்கள் மலர் மாலை அணிவித்தார் . இதனைத்தொடர்ந்து.வருகை தந்த விருந்தினர்களாலும் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களாலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதிபரின் தலைமையுரையைத் தொடர்ந்து- இப்பாடசாலையில் கல்வி கற்பித்த ஆசிரியர்களான, திரு சன் வாமதேவன் (ஓய்வுநிலை அதிபர் ) அவர்களாலும், திரு ஆ.அருமைநாயகம் (ஓய்வு நிலை கோட்ட கல்விப் பணிப்பளர்) அவர்களாலும், அமரர் திருமதி த.கமலாதேவி அவர்களைப்பற்றிய நினைவுரையாற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து திரு பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் கருத்துரையாற்றினார்.
இதன் பின்னர் தெரிவான, மாணவர்கள் பத்துப் பேருக்கும்-வர்த்தக வங்கியில்(வேலணைக் கிளை) பணம் வைப்பு செய்யப்பட்ட கையேடு வருகை தந்த விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வங்கியாளரினால், ,இவ்வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மீளப்பெறுவது தொடர்பாக விளக்கம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அன்னாரின் பெயரால் பாடசாலைக்கு புதிய கணனியை, திருமதி பாலசுந்தரம்பிள்ளை அவர்களினால் பாடசாலை சமூகத்திடம் வழங்கிவைக்கப்பட்டது.
திரு கணேசுவரன்(இலண்டன்) அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட இரண்டு கணனி தொகுதிகளையும் திரு இ.சிவநாதன் (பழைய மாணவரும் இத்திட்டத்தின் இணைப்பாளரும்) அவர்களினால் பாடசாலை சமூகத்திடம் வழங்கி வைக்கப்பட்டது.
இறுதியில் பாடசாலை மாணவராலும் பாடசாலை ஆசிரியராலும் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.

இறுதியில் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதியபோசனம் வழங்கப்பட்டது.
இவ் கல்விக்கான ஊக்குவிப்புத் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட மாணவர்களுக்கு தொடர்ந்து மாதா மாதம் உதவு தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

இத்திட்டத்தின் ஸ்தாபகராகவும் அனுசரனையாளராகவும் உள்ளவர் அமரர் திருமதி கமலாதேவி தர்மலிங்கம் அவர்களின் மகளும் இலண்டனில் மருத்துவராகவும் சேவையாற்றுபவருமான திருமதி சதாபானு ஜனகன் அவர்களாவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனிடம் வேண்டுவதுடன் இத்திட்டத்தின் மூலம் உதவிகளைவழங்கிய அனைவருக்கும் பாடசாலை சமூகம் தமது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux