யாழ் மண்டைதீவில் “எக்கோ பீச் பார்க்” என்ற பெயருடன் உல்லாசக்கடற்கரையின் பணிகள் மீண்டும் முன்னெடுப்பு-படங்கள் இணைப்பு!

யாழ் மண்டைதீவில் “எக்கோ பீச் பார்க்” என்ற பெயருடன் உல்லாசக்கடற்கரையின் பணிகள் மீண்டும் முன்னெடுப்பு-படங்கள் இணைப்பு!


மண்டைதீவின் வடக்குப் பக்கத்தில் உல்லாசக் கடற்கரையினை அமைக்கும் பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இக்கடற்கரைக்குச் செல்வதற்காக,மண்டைதீவு பிரதான வீதியிலிருந்து  புதிய வீதி ஒன்று ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதுடன் மேலும்  இவ்வீதியின் இரு மருங்கிலும் சோலர் மின் விளக்குகள்  பொருத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் விபரங்கள் வருமாறு…
01-மண்டைதீவுச் சந்தியில் மிக விரைவில் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக-பொலிசாரை ஆதாரங்காட்டி செய்தி ஒன்று ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
02-மண்டைதீவில் எக்கோ பீச் பார்க் என்ற பெயருடன்  பல கோடி ரூபாக்களில் உல்லாசக்கடற்கரை அமைக்கும் பணிகள் தற்போது வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
03-மண்டைதீவு  உல்லாசக்கடற்கரையை நோக்கி 150க்கும் மேற்பட்ட சோலர் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக மேலும் அறியமுடிகின்றது.

04- மண்டைதீவில் சர்வதேச கிரிகெட் மைதானம் ஒன்று  இப்பகுதியில் அமைக்கப்படவுள்ளதாகவும்  ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
விரைவில்   தீவகத்தின் உல்லாசபுரியாக மண்டைதீவு  மாறலாம்-ஆனால் இது ஆரோக்கியமான மாற்றமாக இருக்குமா?என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
16910806_1852571155024607_1842925653_o (1)
16930613_1852571135024609_1065034476_o (1)
16880869_1852571188357937_1387821006_o
16930613_1852571135024609_1065034476_o (1)
16910806_1852571155024607_1842925653_o
image-0-02-06-d2679237e2122b4531aed806b17887395e286360b1567df3eed9fce78fe98ddb-V
unnamed
image-0-02-06-f75f2e834d8e60ae88fcab728699ca8971fe5b053e138e0a1ff5bb0f7ecc8814-V
image-0-02-06-02db5112572d0bed6c1a86f1d6f41c6ef2d37b99794d5b7f4351761ed427f0d9-V
image-0-02-06-0bc3d3e150b532763a397a076975d6769c434f0671bf50f0e4cbf86f253abfb6-V
image-0-02-06-7b9f0daab418c0deaad1aa4a2b6b58d8bb6e376ca5ecaa3a0256fcea32d8d67e-V
image-0-02-06-7001524b979de8f4006b17f3048661cb92d03978b6c6ec8e1536df82d0e1d23f-V
image-0-02-06-7b9f0daab418c0deaad1aa4a2b6b58d8bb6e376ca5ecaa3a0256fcea32d8d67e-V
16808737_218205201984788_324627772_n
16809879_218368251968483_1035676762_n
16809678_218373061968002_1959110360_n
16650887_1844838299131226_1222990427_o
16521861_1844838379131218_1881843964_n
16523653_1844838205797902_1282700169_o
16523987_1844838282464561_2108071691_o (1)
16586576_1844838209131235_2085638576_o
16651725_1844838382464551_1628182227_n
16650623_1844838192464570_1254515028_o
16651225_1844838275797895_797381750_o
16667540_1844838325797890_1582640332_o

விரைவில்   தீவகத்தின் உல்லாசபுரியாக மண்டைதீவு  மாறலாம்-ஆனால் இது ஆரோக்கியமான மாற்றமாக இருக்குமா?என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

யாழ் நகருக்கு மிக அண்மையாக அமைந்துள்ள – தீவகத்தின் தலைத் தீவாக விளங்கும் மண்டைதீவின் மேல் அரச அதிகாரிகளின் பார்வைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் நகருக்கு அண்மையாக அமைந்துள்ளதாலும் – போக்குவரத்துக்கு இலகுவாக இருப்பதனாலும்,அரச அதிகாரிகள் மண்டைதீவுப் பகுதியை,தெரிவு செய்திருப்பதாக மேலும்  அறிய முடிகின்றது.

கடந்த சில வாரங்களுக்கு  முன்னர்   மண்டைதீவுக்கு விஜயம் மேற்கொண்ட- இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான அதிகாரிகள் குழு- மண்டைதீவு பிரதேசத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்ததாகவும்- நிர்மாணப்பணிகள் இவ்வருடத்திற்குள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து வடமாகாண அமைச்சினால், மண்டைதீவின் வடக்குப் பக்கத்தில் நவீன உல்லாசக் கடற்கரையினை அமைக்கும் பணிகள் வேகமாக  முன்னெடுக்கப்பட்டு வருவதாக  தெரிய வருகின்றது. இந்த மாதக்கடைசியில் கடற்கரை திறந்து வைக்கப்படவுள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்தியொன்று தெரிவிக்கின்றது.

இவற்றுக்கு வேண்டிய பெருந்தொகையான உபகரணங்கள் மண்டைதீவுக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.

யாழ் வலம்புரி  பத்திரிகையில்,  வடக்கில் அமைக்கப்படவுள்ள  சிறுவர் மருத்துவமனையை,மண்டைதீவில் அமைப்பது எல்லா வகையிலும் பொருத்தமானது என்ற செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.  

இனி வரும் காலங்களில்-தீவகத்தின் தலைத்தீவாகிய மண்டைதீவு மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகவும்-உல்லாச புரியாகவும் மாறுவதற்கான வாய்ப்புக்கள் அமையப் பெற்றுள்ளதாகவே நம்பப்படுகின்றது.

16492282_1842551239359932_659892702_o
16466248_1842551209359935_214783239_o
16466365_1842551276026595_300299359_o
16466439_1842551169359939_1962291832_o
16466637_1842551079359948_1758442129_o
16466576_1842551156026607_1531274780_o
16491251_1842551129359943_1209011700_o
16443832_1842551162693273_532732745_o
16491364_1842551022693287_2008163540_o
16491656_1842551016026621_217577720_o
16492387_1842551146026608_1340148507_o
16491702_1842551142693275_622436602_o
kirikat-4
kirikat-3
kirikat-5
kirikat-2

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux