மண்கும்பான் பாடசாலை உட்பட வடக்கில் 275 பாடசாலைகளுக்கு மூடுவிழா-விபரங்கள் இணைப்பு!

மண்கும்பான் பாடசாலை உட்பட வடக்கில் 275 பாடசாலைகளுக்கு மூடுவிழா-விபரங்கள் இணைப்பு!

இலங்கை நாட்டில் உள்ள மொத்தம் 10,194 பாடசாலைகளில் 50 க்கும் குறைவான மாணவர்தொகையைக் கொண்ட 1,486 பாடசாலைகளை மூடுவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

யாழ் தீவகத்தில்,மண்கும்பான் கிராமத்தில் அமைந்துள்ள ஒரேயொரு பாடசாலையான,மண்கும்பான் தமிழ் கலவன் வித்தியாலயத்தில்,42 மாணவர்கள் வரை கல்விகற்பதனால்,இப்பாடசாலையும் மூடப்படலாம்-என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

மிக அருகில் உள்ள பாடசாலைகளே சிறந்த பாடசாலைகள்’ என்ற திட்டம்  முன்னெடுக்கப்படுவதையடுத்தே இது தொடர்பில் கல்வியமைச்சு தீர்மானத்தை எடுத்திருக்கிறது.

50 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் வடமாகாணத்திலேயே கூடுதலாக இருப்பதாக கல்வியமைச்சின் விபரங்கள் தெரிவிக்கின்றன. அங்கு 275 அத்தகைய பாடசாலைகள் இருக்கின்ன.

மத்திய மாகாணத்தில் 240, சப்ரகமுவ மாகாணத்தில் 230, தென்மாகாணத்தில் 125, கிழக்கு மாகாணத்தில் 141, வடமேல் மாகாணத்தில் 133, வடமத்திய மாகாணத்தில், 111, ஊவா மாகாணத்தில 158, மேல் மாகாணத்தில் 73, பாடசாலைகளில் 50 க்கும் குறைவான மாணவர்கள் கல்விகற்கிறார்கள்.

இந்த பாடசாலைகளை மூடிவிட்டு அவற்றில் உள்ள மாணவர்களை அவர்களது வதிவிடங்களுக்கு மிக அண்மித்தாகவுள்ள பாடசாலைகளுக்கு மாற்றுவதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக கல்வியமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டில் உள்ள 10,194 பாடசாலைகளில் 9,841 பாடசாலைகள் மாகாணங்களின் கல்வியமைச்சுகளின் கீழ் வருகின்றன.353 தேசிய பாடசாலைகள் மத்திய கல்வியமைச்சின் பரிபாலனத்தின் கீழ் வருகின்றன.

Leave a Reply