புங்குடுதீவில்,கற்றாழைகளை களவாகப் பிடிங்கி  சென்றவர்களின் வாகனம்-மண்டைதீவுச் சந்தியில் மடக்கிப்பிடிப்பு-விபரங்கள் இணைப்பு!

புங்குடுதீவில்,கற்றாழைகளை களவாகப் பிடிங்கி சென்றவர்களின் வாகனம்-மண்டைதீவுச் சந்தியில் மடக்கிப்பிடிப்பு-விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதியில் கற்றாழைகளை களவாக பிடுங்கி சென்ற தென் பகுதியைச் சேர்ந்த இரு வியாபாரிகள் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் மண்டைதீவு சந்தியில் இன்று (03.03.2019) ஞாயிறு மதியம் இடம்பெற்றது.

யாழ் தீவகம் புங்குடுதீவு பகுதியில் அமைந்துள்ள கற்றாழை தோட்டங்களுக்குள் புகுந்த தென்னிலங்கை வியாபாரிகள் அங்கிருந்த பயிர்களை களவாக பிடுங்கி வாகனத்தில் ஏற்றி வந்துள்ளனர்.

இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் குறித்த வாகனத்தை மறிக்க முற்பட்ட போது தப்பித்துள்ளனர். இதனால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு மண்டைதீவு சந்தியில் வைத்து இருவரும் மடக்கி பிடிக்கப்பட்டனர்.

ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் விவேகாந்த் தலைமையிலான பொலிஸாரே இந்த கைது நடவடிக்கையில் ஈடுபடடனர்.

கைது செய்யப்படட சந்தேக நபர்களையும் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தினையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux