யாழ் மண்டைதீவில்,ஒரேநேரத்தில் தகனம் செய்யப்பட்ட இரு பூதவுடல்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் மண்டைதீவில்,ஒரேநேரத்தில் தகனம் செய்யப்பட்ட இரு பூதவுடல்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் மண்டைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட மூவர் அடுத்தடுத்து காலமான,செய்தியறிந்து மண்டைதீவு,அல்லைப்பிட்டி மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியதாக தெரியவருகின்றது.
கடந்த 21.02.2019 வியாழக்கிழமை அன்று மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்,அல்லைப்பிட்டி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு மாணிக்கம் தர்மலிங்கம் அவர்கள் இறைபதமடைந்தார்.அதன்பின்னர் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய தர்மகர்த்தா
ஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு  அவர்கள் அமரத்துவம் அடைந்தார். மூன்றாவதாக,வறுமையை எதிர்த்து போராடி கடுமையான உழைப்பால் படிப்படியாக முன்னேறிய திரு பாலசிங்கம் ஸ்ரீபாதன் (ஸ்ரீபாலு) அவர்கள் தனது 54வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.இம்மூவரின் இறுதிநிகழ்வுகளும் கடந்த 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றன.

அமரர் மாணிக்கம் தர்மலிங்கம் அவர்களின் இறுதிநிகழ்வுகள்அல்லைப்பிட்டியில் நடைபெற்றதாகவும் ,அமரர்
ஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு  அவர்களின் ஈமைக்கிரியை,மண்டைதீவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று-பூதவுடல் -தலைக்கீரி இந்துமயானத்திற்கு எடுத்துவரப்பட்ட அதேநேரம்-அமரர்
பாலசிங்கம் ஸ்ரீபாதன் (ஸ்ரீபாலு) அவர்களின் ஈமைக்கிரியை, யாழ் கோண்டாவில் பொற்பதி வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று-
பூதவுடல் மண்டைதீவு இந்து மயானத்திற்கு எடுத்து வரப்பட்டு-தகனம் செய்யப்பட்டது.

அமரர்
ஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு  அவர்களின்
பூதவுடலும்,
அமரர்
பாலசிங்கம் ஸ்ரீபாதன் (ஸ்ரீபாலு) அவர்களின்
பூதவுடலும், ஒரேநேரத்தில் அருகருகே வைத்து தகனம் செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.பெருமளவான மக்கள் இறுதியாத்திரையில் கலந்து கொண்டதாக மண்டைதீவிலிருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux