அல்லைப்பிட்டி சிந்தாமணிப்பிள்ளையாரின் மகாகும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவின் முழுமையான வீடியோப்பதிவு இணைப்பு!

அல்லைப்பிட்டி சிந்தாமணிப்பிள்ளையாரின் மகாகும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவின் முழுமையான வீடியோப்பதிவு இணைப்பு!

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள சிந்தாமணிப்பிள்ளையாருக்கு கும்பாபிஷேகம் -விபரங்கள் படங்கள் இணைப்பு
யாழ் தீவகம் அல்லைப்பட்டியில் அமைந்துள்ள சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயம் புனரமைக்கப்பட்டு கடந்த 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாலய விக்கிரகங்கள் அனைத்தும் திருடர்களால்,களவாடப்பட்டு -கால்நடைகளின் தங்குமிடமாகக் காணப்பட்ட நிலையில்-மீண்டும் ஆலயத்தை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தி ஒருகால பூஜைசெய்து பிள்ளையாரை மகிழ்விக்க வேண்டும்-என்ற நோக்கோடு முயன்று அதற்கு அனைத்து வழிகளிலும்ஒத்துளைப்பு நல்கிய அனைவருக்கும் -அல்லையூர் இணையத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கீழே சிந்தாமணிப்பிள்ளையாரின் எண்ணைக்காப்பு மற்றும் கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா ஆகியவற்றின் முழுமையான வீடியோப்பதிவினை இணைத்துள்ளோம்.

அல்லைப்பிட்டி சிந்தாமணி பிள்ளையார் ஆலயமானது,யாழ்ப்பாணக் குடாநாட்டின் தீவகத்தில் உள்ள அல்லைப்பிட்டியின் 3ம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு பழம் பெரும் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாகும்.பண்ணை வீதிக்கருகாமையில் சிந்தாமணி பிள்ளையார் வீதியில் இவ் ஆலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயம் அல்லைப்பிட்டியில் அமைக்கப்பட்ட முதலாவது ஆலயமாகும்.இங்கு எழுந்தருளியுள்ள பிள்ளையார் சிந்தாமணிப்பிள்ளையார் எனவும் சருகுப்பிள்ளையார் எனவும் அழைக்கப்படுகிறார்.

இவ்வாலயம் ஏறத்தாழ 350 ஆண்டுகள் பழமையானது எனவும்-ஒரு காலத்தில் தேரோடிய ஆலயமாக சிறப்புற்று விளங்கியதாகவும்-தெரியவருகின்றது.இவ் ஆலயத்தின் தலவிருட்சம் ஆலமரம் ஆகும்.

இவ்வாலயத்திற்கு நீண்டகாலமாக (40 வருடங்களாக) நடராஜாக்குருக்கள் அவர்கள் பூஜை வழிபாடுகள் செய்துவந்தார்.சோமஸ்கந்தக்குருக்கள் அவர்களும் பூஜைகள் செய்து வந்தார்.1999 ஆம் ஆண்டிலிருந்து 2006ம் ஆண்டு வரை அப்பாச்சாமிக்குருக்கள் பூசை வழிபாடுகள் செய்து வந்தார்.1989ஆம் ஆண்டளவில் ஆலயம் புதுப்பிக்கும் நோக்கில் இடிக்கப்பட்டு கட்டப்பட்டது.ஆனாலும் புதிய கட்டிடம் இந்து ஆலயங்களின் கட்டுமானமுறைக்கு அமையாததால் 2000ஆம் ஆண்டளவில் மீளவும் இடிக்கப்பட்டது.2006 இல் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக கட்டுமானப்பணிகள் தடைப்பட்டன.மீண்டும் 2011 தொடக்கம் 2015 வரை இடம்பெற்ற கட்டுமானப்பணிகளால் ஆலயம் தற்போதைய நிலையை அடைந்துள்ளது.

காணாமல்பாேன ஆலய கருவறை சிலையும் எழுந்தருளியும்விஷமிகளால் திருடப்பட்ட  ஆலய விக்கிரகங்கள்

2012ம்ஆண்டு சிந்தாமணி பிள்ளையார் ஆலய சிலைகள் விஷமிகளால் திருடப்பட்டது.350 ஆண்டுகள் பழமைவாய்ந்த இச் சிலைகள் போர்க்காலத்திலும் பாதுகாப்பாக இருந்தன.அல்லைப்பிட்டி மக்கள் இடம்பெயர்ந்திருந்து வேறு இடங்களில் தங்கியிருந்த போதும் இச் சிலைகள் திருடப்படாமல் பாதுகாப்பாகவே இருந்தன.இச் சிலைகள் காலம்காலமாக அல்லைப்பிட்டி மக்களால் பூசைகள் நடாத்தப்பட்டு வழிபடப்பட்டு வந்தது.இச் சிலைகள் மிகவும் பழைமையானவை.எழுந்தருளி சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டது.இச் சிலைகள் இன்றுவரை மீட்கப்படவில்லை.இதற்கு பதிலாக 2014ம் ஆண்டு புதிய கற்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply