தீவகம் வேலணையைச் சேர்ந்த,அமரர் செல்வி சிவநாதன் அன்பரசி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

தீவகம் வேலணையைச் சேர்ந்த,அமரர் செல்வி சிவநாதன் அன்பரசி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!


அல்லையூர் இணையத்தின் அறப்பணியாளரும்-நிழற்படப்பிடிப்பாளருமாகிய,வேலணையைச் சேர்ந்த திரு இந்துநாதன்.சிவநாதன் அவர்களின் அன்பு மகளும், கிளிநொச்சி மத்திய கல்லூரியின் 2009ம் வருடத்தின் 8ம் வகுப்பு மாணவியுமான- அமரர் செல்வி அன்பரசி(பிரியா) சிவநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் 16.02.2019 திங்கட்கிழமை இன்றாகும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.

நீங்காத நினைவுகள்
பத்தாம்ஆண்டு நினைவு நிகழ்வு (16/02/2019 இன்று)
அமரர் அன்பரசி சிவநாதன் அவர்களி்ன்
என் உயிரை உறைய வைத்த நாள்
எம் குடும்பத்தின் குல கொழுந்து 
குண்டடிபட்டு குரல்வளை நசுக்கப்பட்டநாள்
எம் குலவிளக்கில் ஏற்றப்பட்ட
தீபஙம் அணைந்த நாள்
ஆயிரமாயிரம் கனவுகளுடன் 
அழகாய் சிரித்து வாழ்ந்த பொக்கிசம்
அன்பு என்றால் இவளே உதாரணம் 
சின்ன சின்ன சிட்டாய்ச சிறகடித்த சித்திரம்
சினமே தெரியாத சிங்கார செல்லம்
கதயால் மற்றவரை வசிகரிக்கும் இளவரசி
கலையழகுடன் கல்வியளகும் 
நிறைந்த குழந்தையவள்
பிரியாமாக அனைவருடனும் 
பழகும் பிரியா இவள் 
அன்பரசி என்னும் நாமம் கொண்டவள்
நீ எம்மை விட்டு மறைந்தாலும் இன்றும் எம்முடன் வாழும் தெய்வம் நீ
ஆண்டுகள் பத்து ஓடியது.
ஆனாலும் மறவோம் உன்னை
இவ்வுலகம் உள்ளவரை
16-02-2019 சனிக்கிழமை இன்று எமது மகள் அமரர் செல்வி அன்பரசி சிவநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் எமது இல்லத்தில் இதனை முன்னிட்டு அன்னாரின் ஆத்மா சாந்தி பெற ஆத்மாசாந்திப் பிராத்தனையும் இடம்பெறும். இறுதியாக மதிய போசனமும் நடைபெறும் .அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.
நன்றி ….

அன்பு மகளே.பிரியா………..
சிரித்த உன்முகம்
சிந்தையில் நிழலாடுது
வசிகர கதைகளால் 
வரவேற்கும் உன் பண்பு
எல்லோர் மனதையும் 
அன்பாள் ஆண்ட 
புண்ணகை அரசியே
உன்பெயரும் அன்பரசி
உன்உருவமும் அன்புருவம்
வன்னி மண்னெங்கும் ஆடிய
உன் ஆடல்கலைகள் எங்கே
பேச்சாற்றலால் 
சபையினையே 
ஆட்டிப்படைத்த 
அந்த உருவமெங்கே
பதுக்குடியிருப்பில்
விழுந்த எறிகணை
உன் ஆத்மாவை 
இளைப்பாற வைத்ததே
இதே நாள் ஒன்றில்
உன் ஆத்மா சாந்திக்காக
இறைவனிடம் வேண்டுகின்றோம்.
இதே நாளில் எமது மகளுடன் எறிகணை வீச்சால் சாவடைந்த 17தமிழ் உறவுகளின் ஆத்மா சாந்தி பெற இறைவனிடம் வேண்டுகின்றோம்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
(குடும்பத்தினர்-வேலணை)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux