அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா அவர்களின் புதல்வர் எழிலனின் 13வது பிறந்த நாள்-கடந்த 08-11-2013 வெள்ளிக்கிழமை அன்று -அவரது இல்லத்தில் எழிமையாகக்கொண்டாடப்பட்டது.
அன்றைய தினம் யாழ் கைதடியில் அமைந்துள்ள விழிப்புலன் இழந்தவர்கள் (23பேர்)தங்கியுள்ள இல்லத்தில் மதியம் சிறப்பு நிகழ்வுடன் விசேட உணவும் வழங்கப்பட்டது.இன் நிகழ்வில் அல்லையூர் இணையத்தின் செய்தியாளர் குருபவராஜா-மற்றும் அல்லைப்பிட்டி மெதடிஸ்த திரு அவையின் போதகர் கருணைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் அவர்களுக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாம் இதைப்பதிவதற்கான-முக்கிய காரணம்
நாளை நீங்களும் இவர்களுக்கு உதவிட முன் வருவீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் தான் இச் செய்தியினை உங்கள் பார்வைக்கு பதிவு செய்துள்ளோம்.
அல்லையூர் இணையம் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக ஆற்றிவரும் அறப்பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து உள்ளங்களுக்கும் இத்தருணத்தில் மீண்டும் ஒருமுறை இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.