
வரலாற்று சிறப்பு மிக்க யாழ் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் நவகுண்ட பட்ச மகாயாக புனராவர்த்தன பிரதிஸ்ட மகா கும்பாபிசேகம் 11.02.2019 திங்கட்கிழமை அன்று பக்திபூர்வமாக நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தினால்,பதிவுசெய்யப்பட்ட கும்பாபிஷேக விழாவின் முழுமையான வீடியோப்பதிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
இவ்வாலயத்தின் கும்பாவிசேக கிரிகைகள் கடந்த 06.02.2019 அன்று விநாயகர் வழிபாடு, ஆசார்யவருணம், அனுக்சை,கோமாதா பூஜையுடன் ஆரம்பமாகிய கும்பாவிசேக கிரிகைகள் கடந்த ஐந்து நாள்கள் இடம்பெற்று இன்று காலை புண்யாகவாசனம் யாகசாலை விசேட பூஜைகளுடன் ஆரம்பமாகி கருவரையில் வீற்றுயிருக்கும் அருள் மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகருக்கு விசேட அபிசேங்கங்கள், ஆராதணைகள் என்ப இடம்பெற்றன.
இதனை தொடர்ந்து யாகசாலையின் பூர்ண கும்பாவிசேத்திற்கான மகாபூர்ணாகதி தீபாரானை கிரகப்பிரீதி யாத்திராதானம் அந்தர்பகிர்பலி, திருமுறை பாராயாணம் இடம்பெற்று பூரண கும்ப கருவரை யாகசாலையில் இருந்து அந்தனர் சிவாச்சாரியார்களிலால் உள்வீதியுடாக மற்றும் வெளிவீதியுடாக எடுத்துவரப்பட்டு பின்னர் சுபநேரம் 10.45 மணியளவில் அனைத்து விக்கிரங்க சாந்திக்கான அனைத்து பிரதான நவகுண்ட பட்ச மகாயாக புனராவர்த்தன பிரதிஸ்ட கும்பாவிசேகம் கும்ப கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டு அபிசேக, ஆராதனைகள் என்ப இடம்பெற்றது.
நவகுண்ட பட்ச மகாயாக புனராவர்த்தன பிரதிஸ்ட 63 வேதபாராயணங்கள் ஒதப்பட்டு அதன்பின்னர் விநாயகருக்கான கிரிகைகள் இடம்பெற்று பின்னர் பிரதான மூலவிக்கிரமான ஸ்ரீ வீரகத்தி விநாயருக்கான கும்பாவிசேக அபிசேகங்கள்,ஆராதனைகள் இடம்பெற்றன.
இவ் கும்பாவிசேக கிரிகைகளை சிவ ஸ்ரீ. குகனேசக்குருக்கள் மற்றும் பிரம்ம ஸ்ரீ நவநீதன் சர்மா தலைமையிலான சிவாச்சாரியர்கள் இவ் கலந்து கொண்டு இவ் கிரிகைகளை நடாத்திவைத்தனர்.
இதில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இஸ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.


































