யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில். குறித்த வாகனம் முற்றாக எரிந்து நாசமாகியது.

3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை நடத்தியது.குறித்த சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“6 பேரில் இருவர் வீட்டுக்கு வெளியே நின்றனர். 4 பேர் வீட்டு வளவுக்குள் புகுந்து வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு பெற்றோல் குண்டை எறிந்தனர். வீட்டின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றனர்” என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதிலும் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் கடந்தும் பொலிஸார் அங்கு வரவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது.