கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட காபட் வீதி  மூன்று வருடங்களுக்குள் சேதமடைந்துள்ளது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட காபட் வீதி மூன்று வருடங்களுக்குள் சேதமடைந்துள்ளது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

பல மில்லியன் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு மூன்று வருடங்கள் முடியும் முன்னரே சேதமுற்ற வீதி தொடர்பில் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தின் ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பிரதான வீதி முதற்தடவையாக  காப்பெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டது. மிக மோசமான நிலையில் காணப்பட்ட வீதி காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டதனால்  பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால்  அப்பிரதேச  மக்களின் மகிழ்ச்சி மூன்று வருடங்கள் கூட நிலைத்திருக்கவில்லை. காரணம் குறித்த வீதி பல இடங்களில் மிக மோசமாக சேதமுற்றுள்ளது. இன்னும் சில வாரங்கள் சேதமுற்ற பகுதிகள் முற்று முழுதாக பாதிப்புற்று விடும் என மக்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு வீதியின் பல இடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டு வருவதோடு அப் பகுதியும் சேதமடையும் நிலையில் காணப்படுகிறது.

 அபிவிருத்தியின் போது குறிப்பிடப்பட்ட நியமங்களுக்கு அமைவாகத் தரமான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படாமையும், அபிவிருத்திப் பணிகளைக் கண்காணிக்க வேண்டிய அரச திணைக்களங்கள்  உரிய முறையில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமையுமே இவ்வாறான  நிலைமைகளுக்குக் காரணம் எனவும், இவற்றை ஒழுங்குபடுத்த வேண்டிய மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவும் அக்கறையின்றி இருப்பதுமே அபிவிருத்தியின் போது முறைகேடுகள் இடம்பெறுவதற்குக் காரணம் என்றும் பொது மக்கள் தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply