மன்னாரில்,வீட்டுக்குள் புகுந்த 7அடிநீளமான முதலை-படம்,விபரம் இணைப்பு!

மன்னாரில்,வீட்டுக்குள் புகுந்த 7அடிநீளமான முதலை-படம்,விபரம் இணைப்பு!

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தரவன் கோட்டை கிராமத்திலுள்ள வீட்டு வளாகத்தினுள் இன்று (9) புதன் கிழமை அதிகாலை புகுந்த முதலை ஒன்றை குறித்த வீட்டின் உரிமையாளர்கள் பிடித்து கட்டி வைத்துள்ளனர்.

தரவன் கோட்டை கிராமத்திலுள்ள குறித்த வீட்டினுள்  முதலை ஒன்றை  கண்ட  குறித்த வீட்டின் உரிமையாளர் கிராம மக்களின் உதவியுடன் பிடித்துள்ளார். குறித்த முதலை  சுமார் 7 அடி நீளம் கொண்டது.

குறித்த வீட்டை சுற்றி குளம் மற்றும் நீர்த்தேக்கம் எவையும் இல்லாத நிலையில்,குறித்த முதலை காட்டிலிருந்து நீரையும், ஆடு,நாய்,கோழி போன்றவற்றை வேட்டையாடும் நோக்கில் கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த முதலை தொடர்பில் கிராம அலுவலகர் மற்றும் மன்னார் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux