இராமேஸ்வரத்தில் கரையொதுங்கிய இலங்கை படகு-தமிழக பொலிசார் தீவிர விசாரணை-படங்கள் இணைப்பு!

இராமேஸ்வரத்தில் கரையொதுங்கிய இலங்கை படகு-தமிழக பொலிசார் தீவிர விசாரணை-படங்கள் இணைப்பு!

தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியில் இலங்கை படகு ஒன்று மர்மமான முறையில் கரை ஒதுங்கியுள்ள நிலையில் குறித்த படகு தொடர்பில் பாதுகாப்புத் படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 இராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டை கடற் கரைப் பகுதியில் இராமேஸ்வரம்  இந்திய கடற்படை முகாமருகே 500 மீற்றர் தொலைவில் மர்மமான முறையில்  இலங்கையின் மன்னார் பகுதியைச் சேர்ந்த படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த படகில்  இயந்திரம் மற்றும் மீன்பிடி வலைகள் காணப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த பகுதி மீனவர்கள் குறித்த படகு தொடர்பில் தெரிவிக்கும் போது,  அதிகாலை மூன்று மணியளவில் குறித்த  படகிலிருந்து மூன்று  பேர்  இறங்கி நடந்து சென்றதாக  தெரிவித்தனர்.

படகிலிருந்துவந்தவர்கள் கடத்தல் பொருட்கள் கொண்டு வந்தனரா? அல்லது அகதிகளை ஏற்றிச்செல்ல வந்தவர்களா? என்பது  குறித்து  தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux