ஆங்கில புதுவருடத்தை முன்னிட்டு,மூன்று இடங்களில் சிறப்புணவு வழங்கப்பட்டது.படங்கள்,விபரங்கள் இணைப்பு!

ஆங்கில புதுவருடத்தை முன்னிட்டு,மூன்று இடங்களில் சிறப்புணவு வழங்கப்பட்டது.படங்கள்,விபரங்கள் இணைப்பு!


ஆங்கில புதுவருடத்தை முன்னிட்டு-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-தாயகத்தில் 01.01.2019 செவ்வாய்க்கிழமை இன்று மூன்று இடங்களில் சிறப்புணவு வழங்கப்பட்டது.அதுபற்றிய விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

01-அல்லையூர் இணையம் முன்னெடுத்துவரும்-ஆதரவற்றோர்களின் பசிதீர்க்கும் அரிய பணியின் 494 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!
காரைநகரைச் சேர்ந்த, அமரர் திரு நாகமணி நடராஜா சண்முகநாதன் அவர்களின் 2ம் ஆண்டு திதியை,முன்னிட்டு -அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,தருமபுரத்தில் அமைந்துள்ள நமச்சிவாய மூதாளர் பேணலகத்தில் வசிக்கும்-முதியவர்களுக்கு ஒருநாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.


02-அல்லையூர் இணையம் முன்னெடுத்துவரும்-ஆதரவற்றோர்களின் பசிதீர்க்கும் அரிய பணியின் 495 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!
நோர்வேயில் வசிக்கும்-செல்வி Avanthika Mayuran இன் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு -அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,கிளிநொச்சியில் அமைந்துள்ள விஷேட தேவைக்குட்பட்ட வலையமைப்பு இல்லத்தில் வசிப்போருக்கு பொருட்களும்,விஷேட சிறப்புணவும் வழங்கப்பட்டது.


03-அல்லையூர் இணையம் முன்னெடுத்துவரும்-ஆதரவற்றோர்களின் பசிதீர்க்கும் அரிய பணியின் 496வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!
ஸ்ரீ நாகபூசணி அம்மனின் அருளாசியுடன்-நயினாதீவைச் சேர்ந்த,திரு,திருமதி சிறிதர்-கிருபாலினி தம்பதிகளின் நிதி அனுசரணையில்,அம்பாறையில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல மாணவிகளுக்கு ஒருநாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux