அல்லைப்பிட்டி சிந்தாமணிப்பிள்ளையாருக்கு பெப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் -விபரங்கள் படங்கள் இணைப்பு

அல்லைப்பிட்டி சிந்தாமணிப்பிள்ளையாருக்கு பெப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் -விபரங்கள் படங்கள் இணைப்பு

அல்லைப்பிட்டிசிந்தாமணிப்பிள்ளையாருக்கு வரும் பெப்ரவரி 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கும்பாவிஷேகம் நடைபெற திருவருள் கிடைத்துள்ளது. அரை நூற்றாண்டுக்கு மேலாக பாலஸ்தானம் செய்யப்பட்டு கும்பாவிஷேகம் ஏதும் இன்றி பெரும் பொருளாதாரக் கஸ்டங்களுக்கு மத்தியில் இருந்து தற்போது கோவில் ஓரளவு மீண்டுள்ளது. எனினும் கும்பாவிஷேகம் மற்றும் மண்டல அபிஷேகம் என்பவற்றிக்கு உதவி செய்ய விரும்பும் அடியவர்கள் ஆலய நிர்வாகத்திடம் தொடர்பு கொள்ளவும்.

தொடர்பு:- 
பொருளாளர் 
தனபாலசிங்கம் ஜனகன்
0094767611440

அல்லைப்பிட்டி சிந்தாமணி பிள்ளையார் ஆலயமானது,யாழ்ப்பாணக் குடாநாட்டின் தீவகத்தில் உள்ள அல்லைப்பிட்டியின் 3ம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு பழம் பெரும் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாகும்.பண்ணை வீதிக்கருகாமையில் சிந்தாமணி பிள்ளையார் வீதியில் இவ் ஆலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயம் அல்லைப்பிட்டியில் அமைக்கப்பட்ட முதலாவது ஆலயமாகும்.இங்கு எழுந்தருளியுள்ள பிள்ளையார் சிந்தாமணிப்பிள்ளையார் எனவும் சருகுப்பிள்ளையார் எனவும் அழைக்கப்படுகிறார்.

இவ்வாலயம் ஏறத்தாழ 350 ஆண்டுகள் பழமையானது எனவும்-ஒரு காலத்தில் தேரோடிய ஆலயமாக சிறப்புற்று விளங்கியதாகவும்-தெரியவருகின்றது.இவ் ஆலயத்தின் தலவிருட்சம் ஆலமரம் ஆகும்.

இவ்வாலயத்திற்கு நீண்டகாலமாக (40 வருடங்களாக) நடராஜாக்குருக்கள் அவர்கள் பூஜை வழிபாடுகள் செய்துவந்தார்.சோமஸ்கந்தக்குருக்கள் அவர்களும் பூஜைகள் செய்து வந்தார்.1999 ஆம் ஆண்டிலிருந்து 2006ம் ஆண்டு வரை அப்பாச்சாமிக்குருக்கள் பூசை வழிபாடுகள் செய்து வந்தார்.1989ஆம் ஆண்டளவில் ஆலயம் புதுப்பிக்கும் நோக்கில் இடிக்கப்பட்டு கட்டப்பட்டது.ஆனாலும் புதிய கட்டிடம் இந்து ஆலயங்களின் கட்டுமானமுறைக்கு அமையாததால் 2000ஆம் ஆண்டளவில் மீளவும் இடிக்கப்பட்டது.2006 இல் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக கட்டுமானப்பணிகள் தடைப்பட்டன.மீண்டும் 2011 தொடக்கம் 2015 வரை இடம்பெற்ற கட்டுமானப்பணிகளால் ஆலயம் தற்போதைய நிலையை அடைந்துள்ளது.

காணாமல்பாேன ஆலய கருவறை சிலையும் எழுந்தருளியும்விஷமிகளால் திருடப்பட்ட  ஆலய விக்கிரகங்கள்

2012ம்ஆண்டு சிந்தாமணி பிள்ளையார் ஆலய சிலைகள் விஷமிகளால் திருடப்பட்டது.350 ஆண்டுகள் பழமைவாய்ந்த இச் சிலைகள் போர்க்காலத்திலும் பாதுகாப்பாக இருந்தன.அல்லைப்பிட்டி மக்கள் இடம்பெயர்ந்திருந்து வேறு இடங்களில் தங்கியிருந்த போதும் இச் சிலைகள் திருடப்படாமல் பாதுகாப்பாகவே இருந்தன.இச் சிலைகள் காலம்காலமாக அல்லைப்பிட்டி மக்களால் பூசைகள் நடாத்தப்பட்டு வழிபடப்பட்டு வந்தது.இச் சிலைகள் மிகவும் பழைமையானவை.எழுந்தருளி சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டது.இச் சிலைகள் இன்றுவரை மீட்கப்படவில்லை.இதற்கு பதிலாக 2014ம் ஆண்டு புதிய கற்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அல்லைப்பிட்டி சிந்தாமணிப்பிள்ளையார் பாடல்கள்

எத்தனையோ காலமாய் ஏற்றமெழ அருள் சொரியும்

சித்தனைத்தும் சேர்ந்து சிரம்தாழ்த்தும் – நித்தமும்

வந்தனைக்குரியவான் முகிலாய் நம்மில் வாழும்

சிந்தாமணிப்பிள்ளையார் சிறப்பு

                                                  அல்லையூரின் சிறப்பு

     

தலமெங்கும் மணிய திரும்

          தெங்குமா வேம்பு கவிபாடும்

ஆலமரம் கிளை அசைந்தால்

           ஆடும் மயில் தோற்றுவிடும்.

கால மகள் கண்ணசைத்தால்

         கற்பகமும் கனிசொரியும்.

கோல வான் முகில் கூட்டம்

          குயிலிசையில் மூழ்கி நிற்கும்.

காலபோக பயிர்கள் மேலே

         கண்மணிபோல் பனி படரும்

ஏலமகள் அல்லிராணியின்

ஏற்றமிகு அல்லைப்பிட்டி.                                        

இயற்றியவர்   *******

சேவியர் வில்பிரட்

Leave a Reply