அன்று முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற எறிகணை வீச்சில் கால்கள் துண்டாடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிறுவர்களான,செல்வன் சங்கர் சிந்துஜன் (இல 84 சிவன் கோவில் வீதி மாயவனூர் வட்டக்கச்சி)என்னும் முகவரியில் வசிக்கும்,தற்போது தரம் 10இல் இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவனுக்கும்-மேலும் செல்வன் சுதாகரன் ரஜீவன் இல 434 ..6ம் யுனிற் இராமநாதபுரம் என்னும் முகவரியில் வசிக்கும்-இராமநாதபுரம் கிழக்கு அ.த.ம பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனுக்கும்-இவர்களின் விருப்பத்தின் பேரில்
(இன்று 25.12.2018 செவ்வாய்கிழமை) துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கான நிதி அனுசரணையினை,தீவகம் காரைநகரைச் சேர்ந்த,லண்டன் மாநகரில் அமைந்துள்ள Pimlico Shopper பல்பொருள் அங்காடியின் உரிமையாளர் வழங்கியிருந்தார்.அவருக்கு-இச்சிறுவர்களின் சார்பிலும்,அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினர் சார்பிலும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதோடு-எமது வேண்டுகோளின் பேரில்-பலத்த சிரமத்தின் மத்தியில்-இச்சிறுவர்களை தேடிக்கண்டுபிடித்து-நமச்சிவாய மூதாளர் பேணலகத்திற்கு அழைத்து வந்து-அவர்களின் விருப்பத்தின் பேரில்-இப்பணியினை இன்றைய நாளில் சிறப்பாக செயற்படுத்திய,தருமபுரத்தில் அமைந்துள்ள நமச்சிவாய மூதாளர் பேணலகத்தின் பொறுப்பாளர் திரு கந்தசாமி ரூபன் அவர்களுக்கும்-எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.











