தீவகம் மண்கும்பான் கிழக்கு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சிவசம்பு கணபதிப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை (திதியை) முன்னிட்டு-19.12.2018 புதன்கிழமை இன்று -அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதியச் சிறப்புணவு வழங்கப்பட்டது. அமரர் சிவசம்பு கணபதிப்பிள்ளை அவர்கள் சமூக ஆர்வலராகவிருந்து பல பொதுப்பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டு வாழ்ந்தவர் என்பது மேலதிக தகவலாகும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
