கனடாவில் காலமான,அமரர் செல்வன் பரிமளகாந்தன் செந்தூரன் அவர்களின் நினைவாக, நடைபெற்ற அறப்பணி நிகழ்வு!

கனடாவில் காலமான,அமரர் செல்வன் பரிமளகாந்தன் செந்தூரன் அவர்களின் நினைவாக, நடைபெற்ற அறப்பணி நிகழ்வு!

அல்லையூர் இணையம் முன்னெடுத்துவரும்-ஆதரவற்றோர்களின் பசிதீர்க்கும் அரிய பணியின் 474 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வும் வாழ்வாதார உதவியும்!

கனடாவில் காலமான,மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் செல்வன் பரிமளகாந்தன் செந்தூரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 05.12.2018 புதன்கிழமை அன்று -அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-அம்பாறையில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல மாணவிகளுக்கு ஒருநாள் சிறப்புணவு வழங்கப்பட்டதுடன் மேலும் யுத்தகாலத்தில் தந்தையை, இழந்து தற்போது தாயுடன் வசித்து வரும்-கா.பொ.த உயர்தரம் கற்கும் மாணவியின் கல்விக்கான வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரமும்,அவர்கள் குடியிருக்கும் வீட்டிற்குள், ஒழுகும் மழைநீரை தற்காலிகமாக தடுப்பதற்காக தறப்பாளும் வழங்கிவைக்கப்பட்டன.

அமரர் செல்வன் பரிமளகாந்தன் செந்தூரன் அவர்களின்ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux