அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரும்,அன்னதானப்பணிக்கு,புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் பேராதரவு வழங்கி வருகின்றனர். கடந்த கார்த்திகை மாதத்தில்,அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்ட அன்னதானப்பணிகளின் சில நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
இப்பணியினை தொடர்ந்தும்,உங்கள் ஆதரவோடு முன்னெடுக்க எண்ணியுள்ளோம்.
இன்றைய தினம் கொடிய வறுமையில் வாடும்-வட்டக்கச்சி மாயவனூர் புதுக்காடு என்னும் பெயர் கொண்ட-கிராம மக்களுக்கு இறைச்சி,முட்டையுடன் 110 பார்சல் உணவுப்பொட்டலங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
எமது பணிக்கு நீங்களும் உதவிட முன்வருமாறு பணிவுடன் வேண்டி நிற்கின்றோம்.
எமது முகநூல் ஊடாக,உடனுக்குடன் விபரங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
மார்கழி மாதம் பின்வரும் திகதிகளில் உணவுவழங்க முற்பதிவு செய்யப்பட்டுள்ளது.
01.12.2018
02.12.2018
05.12.2018
06.12.2018 (மூன்று இடங்களில்)
08.12.2018
15.12.2018 (அல்லைப்பிட்டியில்)
19.12.2018 (மண்கும்பானில்)
20.12.2018 (வவுனியாவில்)