மண்டைதீவில் சிறப்பாக  நடைபெற்ற,அமரர் சிவப்பிரகாசம் சிறிக்குமரன் அவர்களின் 31ம் நாள் நிகழ்வுகள்-படங்கள் இணைப்பு!

மண்டைதீவில் சிறப்பாக நடைபெற்ற,அமரர் சிவப்பிரகாசம் சிறிக்குமரன் அவர்களின் 31ம் நாள் நிகழ்வுகள்-படங்கள் இணைப்பு!

சுவிஸில் காலமான,மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் சிவப்பிரகாசம் சிவ சிறிக்குமரன் அவர்களின் அந்தியேட்டிக்கிரியை,  கடந்த வியாழக்கிழமை அன்று ,அவர் பிறந்து வளர்ந்த மண்டைதீவில் நடைபெற்றதுடன்-மேலும் 24.11.2018 சனிக்கிழமை அன்று மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள திவாகர் நற்பணி மண்டபத்தில்,ஆத்மசாந்திப் பிரார்தனையும்,அஞ்சலி நிகழ்வும்,அதனைத் தொடர்ந்து  மதியபோசனமும் இடம்பெற்றது.

சுவிஸிலிருந்து அன்னாரின்  அஸ்தி மண்டைதீவுக்கு எடுத்துச்செல்லப்பட்டு -மண்டைதீவு  தெற்கு கடற்கரையில் கிரியைகள் செய்யப்பட்டு கடலில் கரைக்கப்பட்டதாக தெரிய வருகின்றது.

அமரர் சிறிக்குமரன் அவர்கள் நீண்டகாலமாக,புலம்பெயர்ந்து சுவிஸில் வாழ்ந்து வந்தபோதும்-தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்டைதீவு மண்ணை உயிராக நேசித்தவர் என்பதுடன்-அவர் இறக்கும் வரை,தொடர்ந்து ஊருக்கு பல உதவிகளைச் செய்து கொண்டிருந்தவர்-என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுவோமாக…

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!ஓம் சாந்தி!!!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux