செல்வன் கமலராசன் சாருஷின் 4வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற,சிறப்பு அன்னதான அறப்பணி நிகழ்வுகள்-விபரங்கள் இணைப்பு!

செல்வன் கமலராசன் சாருஷின் 4வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற,சிறப்பு அன்னதான அறப்பணி நிகழ்வுகள்-விபரங்கள் இணைப்பு!

பிரான்ஸில் வசிக்கும்,செல்வன் கமலராசன் சாருஷின் 4வது பிறந்தநாளை முன்னிட்டு-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,தருமபுரத்தில் அமைந்துள்ள நமச்சிவாய மூதாளர் பேணலகத்தைச் சேர்ந்த,முதியவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டதுடன் மேலும் ஜந்து  இரும்புக்கட்டில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

அத்தோடு கொடிய வறுமையில் வாடும்,வட்டக்கச்சி மாயவனூர் புதுக்காடு என்னும் கிராமத்தில் வசிக்கும்,மக்கள் அனைவருக்கும் சிறப்புணவு வழங்கப்பட்டதன.

இங்கு தற்போது பெய்துவரும் கடும் மழையினால்,இக்கிராமமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு சிறுவர்கள் போசாக்கின்மையால் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ள நிலையில்-இன்றையதினம் முட்டை,இறைச்சி,மீன் ஆகியவற்றுடன் இவர்களுக்கு சிறப்புணவு  வழங்கப்பட்டது.

இப்பணிக்கு நிதி வழங்கிய திரு கமலராசன் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு-அவரின் புதல்வரான செல்வன் சாருஷ்,சிறப்புடன் வளர இறையாசிவேண்டி வாழ்த்தி மகிழ்கின்றோம்.

செல்வன் கமலராசன் சாருஷ்,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு எஸ்.ஆர் அவர்களின் அன்புப்பேரனாவார்.

Leave a Reply