லண்டனில் இடம்பெற்ற, விபத்தொன்றில் தெய்வாதீனமாக,உயிர்தப்பிய அல்லைப்பிட்டி  வர்த்தகர்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

லண்டனில் இடம்பெற்ற, விபத்தொன்றில் தெய்வாதீனமாக,உயிர்தப்பிய அல்லைப்பிட்டி வர்த்தகர்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

பிரான்ஸில் வசிக்கும்,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு தவவிநாயகம் சந்திரகுமார் (சந்திரன்) அவர்கள் -பிரான்ஸிருந்து லண்டனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தின்  பின்பக்கமாக,பாரவூர்த்தியொன்று மோதியதால்,வாகனம் கடும் சேதத்திற்குள்ளானதாகவும்-வாகனத்தை ஓட்டிச்சென்ற, திரு சந்திரகுமார்- அவரது மனைவி மற்றும் தாயார் ஆகிய மூவரும்  கடவுளின் கருணையினால்,  சிறுகாயங்களுடன் உயிராபத்தின்றி  மீண்டு வந்துள்ளார்கள் என்று-சம்பவத்தை பார்வையிட்ட உறவினர் ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.

தற்போது அல்லையூர் இணையத்தளம் இயங்கிக் கொண்டிருப்பதற்கு,முதற் காரணமானவராகவும்-அல்லையூர் இணையம் முன்னெடுத்துவரும் அறப்பணிகளுக்கு உதவிடும் முதன்மையானவராகவும்-ஊரில் நடைபெறுகின்ற ஆலயப்பணிகளுக்கு முன்னின்று உதவும் உள்ளமாகவும்-திரு தவவிநாயகம் சந்திரகுமார் அவர்கள் இருக்கின்றார்.எனவே  “தர்மம் தலைகாக்கும்” என்ற தத்துவத்திற்கு அமைய,உயிராபத்திலிருந்து காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி சொல்வதோடு-அவரின் உடல்நலன்தேறிட இறையாசி வேண்டி நிற்கின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux