அல்லைப்பிட்டி வாகீசர் சனசமூக நிலைய நிர்வாகத்தின் ஊடாக,மூன்று திறமைமிக்க மாணவர்களின் கல்விக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
செல்வி அருணாசலம் பவித்திரா (தரம்-11)-10ஆயிரம் ரூபாக்கள் மற்றும் செல்வன் புஸ்பாகரன் சானுஜன்,செல்வன் பிரதீபன் நிருபன் ஆகிய இரு மாணவர்களுக்கு தலா ஜயாயிரம் ரூபாக்கள் பெறுமதியான கற்றல் உபகரணங்களும் நேற்றைய தினம் 11.11.2018 அன்று வழங்கிவைக்கப்பட்டன.
அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-பிரான்ஸ் நாட்டில் வசிக்கும்-இப்பகுதியைச் சேர்ந்த,இளைஞர் ஒருவர்(அவர் தனது பெயரை பதிவிடவேண்டாம் என்று பெருந்தன்மையுடன் கேட்டுக்கொண்டார்)அனுப்பியநிதியின் மூலமே-இம்மாணவர்களுக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.