சுவிஸில் நடைபெற்ற,அமரர் சிவப்பிரகாசம் சிவ சிறிக்குமரன் அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோ  மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

சுவிஸில் நடைபெற்ற,அமரர் சிவப்பிரகாசம் சிவ சிறிக்குமரன் அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

யாழ். மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் சிவ சிறிக்குமரன் அவர்கள் 23-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 29.10.2018 திங்கட்கிழமை அன்று சுவிஸில் நடைபெற்றது.அல்லையூர் இணையத்தினால்,பதிவுசெய்யப்பட்ட இறுதிநிகழ்வுகளின் சில நிழற்படங்களும்-மேலும் நேரடியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட வீடியோப்பதிவும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம்(தலைமை ஆசிரியர்) ஜெயலட்சுமி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற அருளம்பலம், விக்கினேஸ்வரி தம்பதிகளின் அன்பு நிறைந்த மருமகனும்,

அருள்மொழி(விஜி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஆதவன், அபிநயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவகுமார், சந்திரகலா, ஜெயகெளரி, காலஞ்சென்ற ஜெயகுமார், சசிகுமார், தவமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜானகி, குகதாசன், சிறிரவீந்திரராசா, துஷியந்தி, சுதாகர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றஜிதா, அனோஜன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ஷாமா அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

சியானி, சுவேதா, மயூரன், பிரணவன், காயத்திரி, நிலுஜனா, கீர்த்தனா, விதுஷனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Leave a Reply