யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Cergy ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி சோமசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்கள் 23-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 25.10.2018 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தினால்,பதிவுசெய்யப்பட்ட இறுதிநிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும், தவவாணி(பிரான்ஸ்), சோமகாந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், இராசலிங்கம்(பிரான்ஸ்), கவிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், சிவபூரணம்(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரியும், கோபாலபிள்ளை(பிரான்ஸ்), மனோன்மணி, பாலசிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், திருஞானசுந்தரம்(சுந்தரம்), பிரேமராணி ஆகியோரின் பெரியம்மாவும், சிவபாதம், ரூபா, மலர், வதனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காத்யாயினி, பகிதரன், பிரசாந்தி, சோவிகா, சோவிகன், சுருதிகா, சுஜிகா, சோவிந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |