கொலண்டில் நடைபெற்ற,மண்டைதீவைச் சேர்ந்த,அமரர்ஆறுமுகம் சந்திரசேகரன் ( ‘பஸ் டிரைவர் சந்திரன்’ ) அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான நிழற்படத்தொகுப்பு இணைப்பு!

கொலண்டில் நடைபெற்ற,மண்டைதீவைச் சேர்ந்த,அமரர்ஆறுமுகம் சந்திரசேகரன் ( ‘பஸ் டிரைவர் சந்திரன்’ ) அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான நிழற்படத்தொகுப்பு இணைப்பு!

யாழ் மண்டைதீவு 2 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து ‘Leeuwarden’ நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.ஆறுமுகம் சந்திரசேகரன் ( ‘பஸ் டிரைவர் சந்திரன்’ ) அவர்கள்  (16.10.2018) அன்று நெதர்லாந்தில் காலமானார்.அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 23.1.218 செவ்வாய்க்கிழமை அன்று நெதர்லாந்தில் நடைபெற்றன.

அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா அவர்களினால்,நேரடியாகப் பதிவு செய்யப்பட்ட-அன்னாரின் இறுதியாத்திரையின் முழுமையான நிழற்படத்தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

அன்னார் காலம் சென்றவர்களான ஆறுமுகம், சிவபாக்கியம்(மண்டைதீவு) தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான செல்லத்தம்பி ( ‘பொன்னுத்துரை’ ), நாகம்மா (மண்டைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும், சீதா தேவியின்(நெதர்லாந்து) அன்புக் கணவரும், காலம் சென்ற மகேந்திரன், வரலட்சுமி (மண்டைதீவு), குணபாலசிங்கம்
( ‘குணம்’, நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மீனலோஜினி ( ‘மீனா’, ஃபிரான்ஸ்) பிரதாப் ( ‘பிரபு’, ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையாரும், பிரபாகரன் (‘பிரபா’ ஃபிரான்ஸ்) லொறின் (ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவகுமார் ( ‘உதயன்’, ஜெர்மனி), கெளரிமாலா (‘கெளரி’, லண்டன், ஐக்கிய இராச்சியம்), வசந்தமலர் ( ஆனந்தி ) – ‘அபிவிருத்தி உத்தியோகத்தர்’, நல்லூர் பிரதேச செயலகம்; இலங்கை, காலஞ்சென்ற பரமேஸ்வரி, காலஞ்சென்ற வின்சன், புவனேஸ்வரி (யாழ்ப்பாணம், இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், லலீந்திரா (ஜெர்மனி), சோமசுந்தரம் / சுந்தர் (லண்டன், ஐக்கிய இராச்சியம்), சத்தியசீலன் / சீலன் (யாழ்ப்பாணம், இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும், பிரியங்கா, பிரித்திகா, பிரவீன், பிரஜித், லொனொக்ஸ்சிவா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 இவ்வறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள், ஊரவர்கள், முகநூல் நட்புகள்,அனைவரும்  ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

தகவல்: பி.மீனலோஜினி (மகள்)பிரான்ஸ்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux