பரிஸில் நடைபெற்ற,பிறந்தநாள் விழாவை  முன்னிட்டு-மண்கும்பான் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-படங்கள் இணைப்பு!

பரிஸில் நடைபெற்ற,பிறந்தநாள் விழாவை முன்னிட்டு-மண்கும்பான் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-படங்கள் இணைப்பு!

பிரான்ஸ் பரிஸில் கடந்த (23.09.2018) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற,செல்வி ஞானசோதி மகேஸ் அவர்களின் 18வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-மண்கும்பான் தமிழ்க் கலவன் வித்தியாலய மாணவர்கள் அனைவருக்கும்-கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

செல்வி மகேஸ் அவர்கள்-பிரான்ஸில் வசிக்கும்-திரு ஞானசோதி-சுதர்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வியும்-மண்கும்பானைச் சேர்ந்த,பெரியவர் திரு சின்னத்தம்பி (குட்டி)அமரர் திருமதி லீலாவதி சின்னத்தம்பி தம்பதியினரின் அன்புப் பேத்தியுமாவார்.

இப்பணியினை,அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் சார்பில்-மண்கும்பான் மண்ணின் மைந்தன் திரு செல்லப்பா பார்த்தீபன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux