யாழ்.மாவட்டத்திலுள்ள கத்தோலிக்க யாத்திரைத் தலங்களில் ஒன்றான -வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்தத் திருவிழா கடந்த – 13 -09-2018 வியாழக்கிழமை அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நவநாட் திருவிழாக்கள் நடைபெற்று 22-09-2018 சனிக்கிழமை காலை 7 மணிக்கு கூட்டுத் திருப்பலியும் அதனைத் தொடர்ந்து சிந்தாத்திரை மாதாவின் திருச்சுரூப பவனியும் இடம் பெற்றது.
அன்னையின் அருளாசி வேண்டி தீவகம் மற்றும் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயத்திற்கு வந்திருந்து அன்னையை வழிபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட பெருநாள் விழாவின் வீடியோப்பதிவினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.