மண்டைதீவு சாப்பலோடை கண்ணகை அம்மனுக்கு  தம்ப மண்டபம் அமைக்கப்பட்ட வரவு செலவு விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன."/>
மண்டைதீவின் வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்தும் பணிகள்  ஆரம்பம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

மண்டைதீவின் வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் அமைந்துள்ள  கிராமங்களின் வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக,தீவகத்தின் தலைத்தீவாகிய மண்டைதீவின் முக்கிய பகுதிகளுக்கு பொதுமக்களின் நிதி அனுசரணையில் வீதி மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை 44 மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில்,மேலும் வேலணை பிரதேசசபையின் மண்டைதீவைச் சேர்ந்த,இரு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 22 மின்விளக்குகளும் விரைவில் பொருத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது  வேப்பந்திடல் முத்துமாரி அம்மன் ஆலய சுற்றாடல்-கண்ணகை அம்மன் ஆலயம்-உதயசூரியன் சனசமூக நிலையம் என மண்டைதீவின் கிழக்குப்பகுதியில் 10மின்விளக்குகளும்,மேலும் திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய நிர்வாகத்தினால்,மகாவித்தியாலயச் சந்தியிலிருந்து 22 மின்விளக்குகளும்,மேலும் சாம்பலோடை கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து 12 மின் விளக்குகளும் என மொத்தம் 44 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் மக்கள் நடமாட்டமுள்ள முக்கிய சந்திகளில்  மேலதிக மின் விளக்குகளை பொருத்தித் தருமாறு மண்டைதீவு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மண்டைதீவு மண்ணின் மைந்தரும்,சமூக ஆர்வலருமாகிய,கனடாவில் வசிக்கும் திரு சி.ஜெயசிங்கம்  அவர்கள் -அல்லையூர் இணையம் விடுத்த  வேண்டுகோளை ஏற்று  மின் விளக்குகள் பொருத்துவதற்காக 50 ஆயிரம் ரூபாக்களை முதலில் வழங்கியிருந்தார்.அவர் வழங்கிய நிதியிலிருந்து 12 மின்விளக்குகள் மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து கிழக்குப்பக்கம் வரை பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மண்டைதீவு சாப்பலோடை கண்ணகை அம்மனுக்கு  தம்ப மண்டபம் அமைக்கப்பட்ட வரவு செலவு விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply