சூழலியல் மேம்பாடு அமைப்பினால் ( சூழகம் ) புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவிலுக்கருகில் அமைந்துள்ள மணற்காடு இந்து மயானம் புனரமைக்கப்பட்டுள்ளதோடு , அதன் சுற்றாடலும் சிரமதானம் மூலம் சீர் செய்யப்பட்டுள்ளது .
வேலணை பிரதேச சபை உறுப்பினர் திரு கருணாகரன் நாவலன் அவர்களின் தலைமையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டதோடு-மேலும் இப்பணிக்காக,புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்தவரும், கொழும்பு கதிரேசன் வீதி சண் பதிப்பக உரிமையாளருமாகிய திரு யோகன் அவர்களினால் ரூபாய் . 30000 நிதியுதவி வழங்கப்பட்டது.
அத்தோடு திரு . கருணாகரன் நாவலன் அவர்களும், தனது பிரதேச சபை உறுப்பினருக்குரிய மாதாந்த சம்பளமாகிய ரூபாய் 15000 த்தினை இப்பணிக்கு வழங்கியதுடன் இப்பணியில் தன்னையும் இணைத்திருந்தார்.