பாரிசில் நடைபெற்ற,கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் மூன்றாம் உலகப் போர் நூல் அறிமுக வெளியீட்டு விழாவின் நிழற்படத்தொகுப்பு!

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் “மூன்றாம் உலகப்போர்”என்னும் நூல் வெளியீட்டு விழா-15-06-2013 சனிக்கிழமை அன்று மாலை பாரிஸ் 18 இல் அமைந்துள்ள மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இன்நிகழ்வில் மறைந்த நடிகர் மணிவண்ணனின் நிழற்படத்திற்கு வைரமுத்து அவர்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.அடுத்து நாட்டியாலய மாணவிகளின் நடன  நிகழ்ச்சியும்-அதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் அறிஞர்கள் உரை  நிகழ்வும்-இறுதியாக விழா நாயகனின் உரையும் இடம்பெற்றது-

இன்நிகழ்வில் அல்லையூர் இணையத்தின் செய்தியாளர் திரு செல்லையா சிவா அவர்களும் கலந்து கொண்டு-கவிப்பேரரசு வைரமுத்துவிடம் ஆசீர்வாதமும்-அவரது நூலினையும் பெற்றுக் கொண்டார்.
எமது செய்தியாளரினால் எடுக்கப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்காக இணைத்துள்ளோம்.
படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்க்கவும்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux