மண்டைதீவு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பழையவீடொன்றினை இடித்து அகற்ற முற்பட்ட வேளை வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததினால்,அதற்குள் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான, மண்டைதீவைச் சேர்ந்த, முருகண்டியில் வசித்து வருபவருமான, திரு கதிரவேலு வசந்தகுமார் (வயது 36) என்னும் மேசன் வேலை செய்யும் தொழிலாளியே உயிரிழந்தவராவார்.
பழைய வீடொன்றினை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது- சற்றும் எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து முதுகுப்புறமாக வீழ்ந்ததனால், குறித்த நபர் படுகாயமடைந்திருந்ததாகவும்-உடனடியாக சக தொழிலாளர்களினால் மீட்கப்பட்டு-யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்தில் அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.