யாழ் தீவகத்தில் புகழ்பெற்ற,வேலணை சாட்டி வெள்ளைக்கடற்கரையானது,பராமரிப்பற்ற நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தீவகத்திற்கு வரும்-உல்லாசப்பயணிகளின் முதல் தெரிவாக சாட்டி வெள்ளைக்கடற்கரையே தற்போது இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இக்கடற்கரையானது வேலணை பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாகும். இக்கடற்கரையினை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய கடமை பிரதேசசபையினை சார்ந்ததாகும்.
இந்துக்களின் விஷேட தினமான ஆடிஅமாவாசையன்று பிதிர்க்கடன் செலுத்தி நீராடும் புனித இடமாகவும்-சாட்டி வெள்ளைக்கடற்கரை அமைந்துள்ளதோடு மேலும்.அன்றைய தினம் வேலணை வங்களாவடி முருகன் தீர்த்தமாடும் கடற்பகுதியாகவும் சாட்டிக்கடல் அமைந்துள்ளது.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து நடைவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்-என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாகும்.