அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில்  நடைபெற்ற, பாராட்டு விழா-படங்கள் விபரங்கள் வீடியோ இணைப்பு!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நடைபெற்ற, பாராட்டு விழா-படங்கள் விபரங்கள் வீடியோ இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் அனுசரணையில்,அல்லைப்பிட்டியில்  கடந்த வருடம்  (2017) இல் கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில்  சிந்தியடைந்த ஏழு  மாணவர்களுக்கான பாராட்டுவிழாவும்,பரிசு வழங்கும்  நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வானது, அல்லையூர் இணய அறப்பணி குடும்பத்தினரின் அனுசரணையுடன் அல்லை இளைஞர் முன்னேற்றக் குழுவின்  ஒருங்கிணைப்பில்,அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய அதிபர்  திரு கோ.பத்மநாதன் அவர்களின் தலைமையில்,வித்தியாலய மண்டபத்தில் கடந்த மாதம்   02.07.2018 திங்கட்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக, கலாநிதி  பண்டிதர் செல்லையா திருநாவுக்கரசு அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக,  வித்தியாலய அதிபர் திரு கோ.பத்மநாதன் – றோமன் கத்தோலிக்க வித்தியாலய அதிபர் திரு வி.என் பத்மநாதன்-  அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்ப இயக்குனர் செ.ஆனந்தக்கரசு- வித்தியாலத்தின் பழைய மாணவர் திரு ஏகாம்பரம் மனோகரன் ஆகியோரும், மேலும் கௌரவ விருந்தினர்களாக அல்லைப்பிட்டி  கடற்றொழில் சங்கத்தலைவர் திரு  ப.றொபேட் பெலிக்ஸ்,அல்லைப்பிட்டி விவசாய சம்மேளனத் தலைவர்  திரு சபா.விநாயகமூர்த்தி, சமூக நலன் விரும்பி திரு த.கேதாரநாதன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கடந்த வருடம்  (2017) இல் கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில்  சிந்தியடைந்த ஏழு மாணவர்களுக்கு,புலம்பெயர்ந்து வாழும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த ஏழுபேரின் நிதி அனுசரணையில் துவிச்சக்கர வண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டன.அது பற்றிய விபரங்கள் கீழே வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் (02.07.2018) அல்லையூர் இணயத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா அவர்களின் 51வது  பிறந்தநாளை முன்னிட்டு-மாணவர்களுக்கு சிற்றுண்டிகளும் குளிர்பானங்களும்  வழங்கப்பட்டன.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux