கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோ நிழற்படப்பதிவுகள் இணைப்பு!

கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோ நிழற்படப்பதிவுகள் இணைப்பு!

யாழ் தீவகம் வேலணை கிழக்கைப்பிறப்பிடமாகவும்-டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட-சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையின் தாபகரும் சிறந்த கவிஞரும்,தமிழ்பற்றாளருமாகிய, கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் கடந்த 26.07.2018 வியாழக்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01.08.2018 புதன்கிழமை அன்று டென்மார்க்கில் நடைபெற்றது.

அன்னாரின் இறுதி நிழ்வில்,உலகின் பல்வேறு நாடுகளில் வாழும்-உறவினர்கள்,நண்பர்கள், இலக்கியவாதிகள் எனப்பலரும்-கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அமரர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களுக்கு,டென்மார்க்கில்-வாழ்நாள் சாதனையாளர் என்ற பட்டமும்,டென்மார்க் சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவையினால்,”சைவப்புனிதர்”என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளன.

அல்லயைூர் இணையத்தின் வளர்ச்சிக்கு,ஆலோசகராகவும்-அறப்பணிச்சேவையினை ஊக்கிவிப்பவராகவும்-இருந்த அமரர்  வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் இறுதிநிகழ்வில்,அல்லயைூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா அவர்கள் நேரடியாக சென்றுகலந்து கொண்டு-அன்னாரின் புகழ் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன்-மேலும் அன்னாரின் இறுதிநிகழ்வுகளை நிழற்படங்களாக பதிவு செய்து-உங்கள் அஞ்சலிக்கு இணைத்துள்ளோம்.

அமரர்  வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் குடும்பத்தினருக்கு,அல்லயைூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினர் சார்பில்,ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு-அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,இறையருளை வேண்டி நிற்கின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux