காணிக்கைத்தேர்…..
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பண்டிதர் கலாநிதி திரு செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் மேற்பார்வையில்,ஆலய நிர்வாகத்தினாலும், மற்றும் பிரான்ஸில் வசிக்கும்,இவ்வாலயத்தின் பங்கைச் சேர்ந்த, திரு பொன்னுத்துரை ஸ்ரனிஸ்லாஸ் அவர்களின் தலைமையிலும் -அல்லைப்பிட்டி புனிதகார்மேல் அன்னைக்கு தேர் ஒன்று அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.அன்னையின் அருளினால்,தேர்த்திருப்பணி சிறப்பாக நிறைவுபெற்று-கடந்த 16.07.2018 திங்கட்கிழமை காலை தேரேறிவந்து பக்தர்களுக்கு-அல்லைப்பிட்டி புனிதகார்மேல் அன்னை அருளாசி வழங்கினார்.
அல்லைப்பிட்டியில் வெகுசிறப்பாக,இடம்பெற்ற புனிதகார்மேல் அன்னையின் தேர்சுற்றுப்பவனியின் முழுமையான வீடியோ மற்றும் நிழற்படப்பதிவினை கீழே இணைத்துள்ளோம்.
அல்லைப்பிட்டியில் மதவேறுபாடின்றி, அனைத்து மக்களாலும் வணங்கப்பட்டுவரும்-புனிதகார்மேல் அன்னையின் தேர்திருப்பணிக்கு,அதிகமான அல்லைப்பிட்டி-மண்கும்பான் இந்து மக்கள் நிதி வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அத்தோடு வழமைபோல்,அமர்கள் திரு திருமதி இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதியினரின் ஞாபகார்த்தமாக,அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,சிறப்பு அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.
முழுமையான கணக்கு விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.