அல்லையூர் இணையத்தின் ஆதரவற்றோருக்கான அன்னதானம் என்னும் பசி தீர்க்கும் அரிய பணியின் 410 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!
மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி -சின்னக்கிளி அவர்களின் 6ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு-08.07.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதியச் சிறப்புணவு வழங்கப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!