யாழ் இந்திய துணைதூதரகத்தின் ஊடாக, இந்திய மத்திய அரசாங்கத்தினால், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கு வழங்கப்பட்ட நிதியிலிருந்து 8மில்லியன் ரூபாவில் நிர்மாணிக்கப்பட்ட போரினால் சிதைவடைந்த யா/மண்டைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்கான புதிய கட்டிடத் திறப்பு விழா கடந்த 02.07.2018 அன்று நடைபெற்றது.
இவ்விழா தீவக மறைக்கோட்ட குருமுதல்வரும் மண்டைதீவு –
அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமான அருட்பணி மனுவேற்பிள்ளைடேவிற் அடிகளாரின்
ஆசியுரையுடன், பாடசாலை அதிபர் திரு. ஜோண் கொலின்ஸ் தலைமையில் சிறப்புற நடை
பெற்றது.