தீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி கோவிலின் வருடாந்த மகோற்சவம் வரும் 20.08.2018 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து திருவிழாக்கள் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக,ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
தற்போது உள்சுற்றுவீதி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால் புலம் பெயர் நாடுகளிலோ அல்லது உள்நாட்டிலோ வசிக்கும்- முருக பக்தர்கள் இப்புனரமைப்புப் பணிகளுக்கு உதவிட முன்வருமாறும் ஆலய நிர்வாகம் அல்லையூர் இணையத்தின் ஊடாக வேண்டுகோள் விடுக்கின்றது.