லண்டனில் நடைபெற்ற,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி விறிசித்தம்மா சிலுவைராசா அவர்களின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

லண்டனில் நடைபெற்ற,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி விறிசித்தம்மா சிலுவைராசா அவர்களின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விறிசித்தம்மா சிலுவைராசா அவர்கள் 29-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னாரின் இறுதிநிகழ்வுகள் கடந்த 12.06.2018 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் நடைபெற்றது. எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிழற்படங்கள் சிலவற்றை கீழே இணைத்துள்ளோம்.அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுரு சுவானி, சுவானி மார்த்தம்மா தம்பதிகளின் அருமைப் புத்திரியும்,

பாவிலு சிலுவைராசா அவர்களின் அன்பு மனைவியும்,

மனோகரி(அமுதா- South Norwood, இங்கிலாந்து), பிறிஜெட்(வசந்தா- Dartford, இங்கிலாந்து), மனோதீபன்(வசந்தன்- Croydon, இங்கிலாந்து) ஆகியோரின் நேசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கீதபொன்கலன், அகஸ்ரின், பிலேந்திரன், மேரி அஞ்சலா, பிரான்சிஸ்கா, அருளப்பு மற்றும் அருட்சகோதரி மெற்றில்டா(பெந்தெகோஸ்தே சபை தேவ ஊழியர் – இலங்கை), அமிர்தநாதர் யேசுதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தர்மநாயகம், கிறிசாந்தன், புஸ்பராணி ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சலோமை, மரியாம்பிள்ளை, சவரிமுத்து, கவிஞர் பாவல் சத்தியசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நொயெமி, தீமொத்தி, செபோறா, ஜாயெல், சாம்சன் ஆகியோரின் ஆசைமிகு அம்மம்மாவும்,

மகிலா, நிகிலா ஆகியோரின் ஆசைமிகு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Leave a Reply