வடமராட்சி கட்டைக்காடு பகுதியில் தனிமையில் தவித்த மூதாட்டிக்கு உதவிய அல்லையூர் இணையம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

வடமராட்சி கட்டைக்காடு பகுதியில் தனிமையில் தவித்த மூதாட்டிக்கு உதவிய அல்லையூர் இணையம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

ஆதரவற்ற மூதாட்டி திருமதி பூமணிதேவி அவர்களுக்கு-குடிசை அமைத்துக்கொடுத்ததுடன் மேலும் ஒரு வருடத்திற்கு மாதந்தோறும் 1000 ரூபாக்கள் பெறுமதியான உலர் உணவுப்பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்தது -அல்லையூர் இணையம்…..

வடமராட்சி வெற்றிலைக்கேணி கட்டைக்காடு பகுதியில் ஆதரவற்ற நிலையில்,தனிமையில் வசித்து வந்த 67 வயதான திருமதி பூமணிதேவி என்னும் மூதாட்டியின் நிலையறிந்து-அவருக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் கருணையினால், 13.06.2018 புதன்கிழமை அன்று -சுவிஸில் வசிக்கும்,மண்கும்பானைச் சேர்ந்த, செல்வி இந்திரன் மிதுளா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10ஆயிரம் ரூபாக்கள் வழங்கப்பட்டதுடன்-மேலும் கனடாவில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,சகோதரி ஒருவர் வழங்கிய 15ஆயிரம் ரூபாக்களையும் சேர்த்து-மொத்தம் 25ஆயிரம் ரூபாக்களில்-கட்டைக்காடு பங்குத்தந்தை மைக் டொனால்ட் அவர்களின் மேற்பார்வையில் இப்பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.

அத்தோடு தொடர்ந்து மாதந்தோறும் பங்குத்தந்தை ஊடாகவும்-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்ப உறுப்பினரின் மேற்பார்வையிலும்- மூதாட்டி திருமதி பூமணிதேவி அவர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்படவுள்ளன.

நம்பினால் நம்புங்கள்….

இப்பாட்டியின் புதல்வர் யாழில் அரசாங்க உத்தியோகத்தில் சேவையாற்றுகின்றார்-என்றும் மருமகளின் கொடுமை தாங்காது வீட்டை விட்டு வெளியேறி-கச்சான் விற்று வைராக்கியத்தோடு வாழ்ந்து வருகின்றார் என்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

அல்லையூர் இணையம்,தாயகத்தில் தொடர்ந்து முன்னெடுத்து வரும்-ஆதரவற்றவர்களுக்கான,அன்னதானப்பணி மற்றும் கல்விப்பணி ஆகியவற்றின் தொடர்ச்சியாகவும்-அல்லையூர் இணையத்தின் 400வது தடவையான சிறப்பு அறப்பணி நிகழ்வாகவும்-இப்பணி முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux