யாழ் மண்டைதீவில்,சிரமதானப்பணியில் இறங்கிய இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் மண்டைதீவில்,சிரமதானப்பணியில் இறங்கிய இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் பிரசித்திபெற்ற,மண்டைதீவு கிழக்குக்கடற்கரையில் அமர்ந்திருந்து அருள்பாலித்து வரும் பூமாவடி பூம்புகார்  கண்ணகி அம்மனின் வருடாந்த பொங்கல் விழாவினை முன்னிட்டு-மண்டைதீவு  இந்து இளைஞர் மன்றத்தினால்,தொடர்ச்சியாக சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2ம் திகதியன்று,ஆலய சுற்றாடல் பகுதியினை, சிரமதானமூலம்  துப்பரவு செய்த,இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள்-மற்றும் ஆலய பரிபாலன சபையினர், மீண்டும்  மறுநாள் கொட்டுக்கிணற்றடி என்று அழைக்கப்படும்-முன்னர் நன்னீர் ஊற்றினைக் கொண்டிருந்த கிணற்றினை தூர்வாரி துப்பரவு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கிணற்று நீர்  முன்னர் நல்ல தண்ணீராக காணப்பட்டதாகவும்-தற்போது உவர்நீராக மாறிவிட்டதாகவும்,சிரமதானப்பணியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.

மண்டைதீவு கிழக்குப்பகுதியில் விவசாய நிலங்களை உள்ளடக்கிய பகுதிகளிலேயே நல்ல தண்ணீர்  கிடைக்கப்பெறுகின்றபோதிலும்-இப்பகுதி வெலுசுமன கடற்படையினரின் முகாம் விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளதாக மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

Leave a Reply