பிரான்ஸில் காலமான,அமரர் திருமதி சசிகுமார் குபேரினி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலியும்,அறப்பணிநிகழ்வும்-விபரங்கள் இணைப்பு!

பிரான்ஸில் காலமான,அமரர் திருமதி சசிகுமார் குபேரினி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலியும்,அறப்பணிநிகழ்வும்-விபரங்கள் இணைப்பு!

பிரான்ஸில் காலமான,மண்கும்பானைச் சேர்ந்த,திரு செல்வரட்ணம் சசிகுமார் அவர்களின் அன்பு மனைவி திருமதி  சசிகுமார் குபேரினி அவர்களின் 2ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் ஏற்பாட்டில்-அம்பாறையில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல மாணவிகளுக்கு 04.06.2018 திங்கட்கிழமை இன்று ஒருநாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.

அத்தோடு மட்டக்களப்பில் வசிக்கும் இரண்டு பெண்பிள்ளைகளுடன் வறுமையில் வாடும் ஏழைத்தாயின் வேண்டுகோளின் பேரில்-இவர்களின் வாழ்வாதாரத்திற்கான உதவியாக,30ஆயிரம் ரூபாக்கள் பெறுமதியான தையல் இயந்திரம் ஒன்றும் -அமரர் திருமதி சசிகுமார் குபேரினி அவர்களின் நினைவாக வழங்கி வைக்கப்பட்டது.

மேலும்  அன்னாரின் 2ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு-கவிஞர் வேலணையூர் சுரேஸ் அவர்களின் கவிவரிகளின் உருவான நினைவுப்பாடல் ஒன்றும் வெளியிட்டப்பட்டது.அப்பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

திருமதி சசிகுமார் குபேரினி அவர்களிஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux