தீவகத்தில்  முழுமையான வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்ட இரண்டாவது கிராமமாக மண்கும்பான்-விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் முழுமையான வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்ட இரண்டாவது கிராமமாக மண்கும்பான்-விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் எடுத்துக்கொண்ட கடும் முயற்சியின் பயனாக,மண்கும்பான் கிராமத்தின் வீதிகள் தோறும் மின்விளக்குகள் விரைவில் ஒளிவீசி பிரகாசிக்கவுள்ளன.இதற்கான முதற்கட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளன.

மண்கும்பான் மேற்கு சாட்டியிலிருந்து,மண்கும்பான் கிழக்கு செட்டிகாடு வரை-மக்கள் செறிந்துவாழும் பகுதிகளை உள்ளடக்கி,இந்த மின்விளக்குகள் இன்னும் சில தினங்களில் பொருத்தப்படவுள்ளன.

இதற்கான நிதி அனுசரணையினை,மண்கும்பானில் வாழ்ந்து மறைந்த,அமரர்கள் சிவப்பிரகாசம்-பூமணி தம்பதியினரின் நினைவாக,அவுஸ்ரேலியாவில் வசிக்கும்-அன்னார்களது புதல்வர் திரு சிவப்பிரகாசம் நேசன் அவர்கள் வழங்கியுள்ளார்.அவருக்கு மண்கும்பான் மக்கள் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அல்லையூர் இணையம்,தாயகத்தில் முன்னெடுத்து  வரும் ஆதரவற்றவர்களுக்கான, அன்னதானப்பணிக்கு-புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும்,மண்கும்பான் மக்களே முதன்மை ஆதரவு வழங்கி வருகின்றார்கள் என்பதனை நன்றியோடு  இச்சந்தர்ப்பத்தில் பதிவுசெய்து கொள்கின்றோம்.

மின்விளக்குகள் பொருத்தப்பட்ட பின்னர் மேலதிக விபரங்கள்  இணைக்கப்படும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux