யாழ் மண்டைதீவில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற,முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் மண்டைதீவில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற,முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் மண்டைதீவில்  உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் (மே18) நினைவுநாள் நினைவேந்தல் நிகழ்வு  நடைபெற்றது.

உலகையே உலுக்கிய முள்ளிவாய்க்கால் மனிதப்பேரவலத்தின் 9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது மண்டைதீவு இரட்டைக் கிணற்று நினைவுத் திடலில் (1990ம்ஆண்டு தீவகத்தினை ஆக்கிரமிக்கவந்த இலங்கை அரசபடையினரால் அழிக்கப்பட்ட தமிழ் உறவுகளை புதைத்த கிணற்றடி) வெள்ளிக்கிழமை (18.05.2018)  மாலை 5மணியளவில் மண்டதீவு கிறிஸ்தவ மதகுருமாரின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள் பொது அமைப்பின் உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நினைவேந்தினார்கள்.

பிரதான சுடர் ஏற்றுதலைத் தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டது. அந்த நேரத்தில் சோகமயமானதாகவும் இறந்த உறவுகளை நினைத்து வந்தவர்கள் அழுது புலம்பியதைக் காணமுடிந்தது.

1990ம் ஆண்டு தீவகத்தை கைப்பற்றிய அரசபடைகள்-அப்பாவித்தமிழ் இளைஞர்களில் பலரை தெரிவுசெய்து -இழுத்துவந்து சுட்டுக் கொன்று விட்டு- சடலங்களை  இந்த இரட்டைக்கிணற்றில்  போட்டு மூடியதாக  இன்றுவரை குற்றம் சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux