யாழ் மண்டைதீவில் 29 பேரின் விவசாயநிலங்கள் அரசாங்கத்தினால் சுவீகரிப்பு-பெயர் விபரங்கள் இணைப்பு!

யாழ் மண்டைதீவில் 29 பேரின் விவசாயநிலங்கள் அரசாங்கத்தினால் சுவீகரிப்பு-பெயர் விபரங்கள் இணைப்பு!

யாழ் மண்டைதீவு கிழக்குப்பகுதியில்,29 விவசாயிகளின் விவசாய நிலங்கள்,அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்டைதீவில் பிரசித்திபெற்ற,வேப்பந்திடல் முத்துமாரி அம்மன் ஆலயத்திலிருந்து  சில நூறுமீற்றர் தூரத்திலிருந்து குறிப்பிடப்பட்டுள்ள விவசாயநிலங்களின் எல்லை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மண்டைதீவில் அமைந்துள்ள  இலங்கை கடற்படையினரின் வெலுசுமன  முகாமை விஸ்தரிப்பதற்காகவே -இந்த விவசாய நிலங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக கீழே இணைக்கப்பட்டுள்ள பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்படையால்  சுவீகரிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு நஸ்டஈடு வழங்கப்படுமா?என்ற விபரங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

Leave a Reply